சினிமா செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்- திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இசை அமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.

காலையில் நெஞ்சு வலிப்பதாக தேவா கூறிய நிலையில், மருத்துவமனைக்கு உடனடியாக குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் தேவாவை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

விருது

1989-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான தேவா 1990-இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது, 1992-இல் தமிழ்நாடு அரசின் கலைமாமனி விருதைப் பெற்றார். 1995-ல் ‘ஆசை’ திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில விருதை பெற்றுத்தந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கியவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவா பல கானா பாடல்களை எழுதி அவரே இசையமைத்து பாடியும் உள்ளார்.

தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT