நடிகர் கிருஷ்ணாவின் புது பட தோற்றம் 
சினிமா செய்திகள்

காக்கி உடையில் மாஸ் காட்டும் கிருஷ்ணா! சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் ‘மர்டர் இன் டவுன்’!

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த நடிகர் கிருஷ்ணாவின் 25-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு ‘மர்டர் இன் டவுன்’ (Murder In Town) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள போஸ்டர்களில், நடிகர் கிருஷ்ணா நரைத்த முடியுடன், மிடுக்கான காக்கி உடையில் தீவிரமான காவல்துறை அதிகாரியாகக் காட்சியளிக்கிறார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் எழுதி, இயக்குகிறார். இவர் கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ரெபெல்' திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மகேந்திரராஜ் சந்தோஷ் குமார் மற்றும் கருணாநிதி வேலப்பன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர் மகேந்திரராஜ் மற்றும் இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்குமே இது முதல் திரைப்படமாகும்.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு கிரண் சூரத் என் இசையமைக்கிறார். கோபால் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கவின் ஆதித்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக வெங்கட் பாலா பணியாற்றுகிறார்.

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் கடந்த ஜனவரி மாதமே நிறைவடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், படத்தின் கதைக்களம் மற்றும் படம் வெளியாகும் தேதி குறித்த கூடுதல் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.