தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாக்கூர் சினிமா மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அவரை சுற்றி காதல் கிசு, கிசுக்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் நடிகர் தனுசுடன் மிருணாள் தாக்கூருக்கு காதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. ஆனால் இந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். எனக்கும் தனுசுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை’ என மிருணாள் தாக்கூர் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான ‘டக்கோயிட்’ படத்தின் புரமோஷன் விழாவில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசிய போது, ‘உங்களை தென்னிந்தியாவிலேயே கட்டிப்போட ஆசை. எனவே தெலுங்கு சினிமா திரையில் இருந்து ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.
அதற்கு மிருணாள் தாக்கூர், ‘சிரித்துக் கொண்டே பதில் எதுவும் கூறாமல் வெட்கப்பட்டார். அவரது திருமணம் குறித்து அடிக்கடி தகவல்கள் வந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிருணாள் தாக்கூர் அளித்த பேட்டியில், ‘இப்போதைக்கு எனக்கு காதலிக்க நேரமில்லை. எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது’ என்று கூறினார்.