சினிமா செய்திகள்

மிஸ்டர் எக்ஸ்– திரை விமர்சனம்

திபு நினன் தாமசின் பின்னணி இசை காட்சிகளுக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மாலை மலர்

இந்தியாவின் ரா உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார். ரஷிய ராணுவத்தால் கைது செய்யப்படும் அவர், அந்த மூலப்பொருளும் அவர்களிடம் சென்று, அதை பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டம் உருவாகிறது.

இந்த திட்டத்தை முறியடிக்க, ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், மஞ்சு வாரியர் மீண்டும் மற்றொரு உளவாளியான ஆர்யாவுடன் சேர்ந்து சரத்குமாரை மீட்டு, அந்த ஆபத்தான மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்.

இறுதியில் இந்த முயற்சியில் வெற்றி பெற்றார்களா? அந்த சதித் திட்டம் தடுக்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்யா, கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனது உடல் மொழியால் ரசிக்க வைத்து இருக்கிறார். சரத்குமார் நடித்த மிஸ்டர் எக்ஸ் கதாபாத்திரம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு பலம் இல்லை.

கெளதம் கார்த்திக் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். மஞ்சு வாரியர் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அதுல்யா ரவி, அனகா, ரைசா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

இயக்கம்

இயக்குனர் மனு ஆனந்த், உளவாளிகள் உலகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பெரிய ஆக்‌ஷன் திரில்லர் கதையை சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகம் எடுத்து இருக்கிறது. ஆங்கில படத்திற்கு இணையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் நல்ல முயற்சி தெரிகிறது. லொக்கேஷன்கள் மற்றும் காட்சியமைப்புகள் நல்ல தரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இசை

திபு நினன் தாமசின் பின்னணி இசை காட்சிகளுக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

சண்டை காட்சி

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சண்டை காட்சிகளில் அனைத்து நடிகர்களையும் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.