சினிமா செய்திகள்

ஆர்யாவின் Mr X படத்தின் புது அப்டேட்

இப்படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார் மற்றும் கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இப்படத்தின் படப்பிடிப்பு 2023-ம் ஆண்டு தொடங்கி 2024-ல் நிறைவடைந்தது. அதன்பின் பல சர்ச்சைகளையும், தாமதங்களையும் சந்தித்த இப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) படம் இந்த மாதம் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார் மற்றும் கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அதுல்யா ரவி, ரைசா வில்சன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் மற்றும் அனகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிஸ்டர் எக்ஸ் படத்தை அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைக்க, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.