ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் பாபநாசம் என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தியிலும் படம் வெற்றிப்பெற அதன் தொடர்ச்சியாக த்ரிஷ்யம் தி கன்குளூசன் என்ற பெயரில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.
இப்படத்திலும் தபு, ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 2ம் தேதி வெளியான இப்படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிவருகிறது.
இந்நிலையில் படக்குழுவினருக்கு நடிகர் மோகன்லால் வாழ்த்து தெரிவித்துள்ளார். படம் தொடர்பாக பேசிய மோகன்லால்.,
“நான் இந்தப் படத்தைப் பார்த்தேன், பெரிதும் விரும்பப்பட்ட இந்தப் பயணத்தை அவர்கள் முடிவுக்குக் கொண்டு வந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அபிஷேக் பதக், அஜய் தேவ்கன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒட்டுமொத்த படக்குழுவும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள் ” என தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் த்ரிஷ்யம் 2, த்ரிஷயம் 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.