சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளப் புதிய படம் வாணவேடிக்கை.
படத்தில் வில்லனாக இயக்குநர் மோகன் ராஜா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஜெயபிரகாஷ், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.