சினிமா செய்திகள்

‘மேயாத மான்’ ரத்ன குமாரின் ‘29’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

29 படம் மே.8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘மேயாத மான், ஆடை’ போன்ற படங்களின் இயக்குநர் ரத்ன குமார் எழுதி, இயக்கியுள்ளப் படம் ‘29’. இப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் மே.8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT