தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் போக்கு தொடருகிறது. அந்தவகையில் முன்னணி நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த 'மெர்சல்' படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம், 'மெர்சல்'. விஜய் 3 வேடங்களில் நடித்த இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூல் குவித்தது.
இதற்கிடையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22), 'மெர்சல்' படம் வருகிற 19-ந்தேதி மீண்டும் திரைக்கு கொண்டுவர இருக்கிறார்கள். இந்தப்படம் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.