கே.ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், கே.பிந்து மாதவி தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’.
முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை ஜிதேஷ் சாய் வழங்குகிறார்.
மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியுள்ள இப்படம், மருத்துவப் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விவேகா மற்றும் பா.விஜய் பாடல்களை எழுதியுள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரபரப்பான திரில்லர் திரைப்படமான ‘நிறம்’,வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.