சினிமா செய்திகள்

'அதோமுகம்' படக் கூட்டணியின் அடுத்த படைப்பு 'மேரேஜ் ஸ்டோரி'- வெளியானது டீசர்

நட்பு, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான கமர்ஷியல் கொண்டாட்டமாக 'மேரேஜ் ஸ்டோரி' படம் உருவாகியுள்ளது.

காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள "மேரேஜ் ஸ்டோரி" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரீல் பெட்டி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுனில் தேவ் இயக்கியுள்ள இப்படம் வரும் 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

"மேரேஜ் ஸ்டோரி" படத்தில் எஸ்.பி.சித்தார்த், ஷபானா ஷாஜகான், ஆர்யா மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்பு, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.

டீசர்

தமிழ்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். தமிழ் அரசன் படத்தொகுப்பு பணிகளையும், மிராக்கிள் மைக்கேல் சண்டைக் காட்சிகளையும் கவனித்துள்ளனர்.

முன்னதாக இயக்குநர் சுனில் தேவ் மற்றும் எஸ்.பி. சித்தார்த் கூட்டணியில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான "அதோமுகம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள "மேரேஜ் ஸ்டோரி" படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வரும் 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT