சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் வெளியான மராத்தி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருது வென்றது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இளையராஜா இசையமைத்த கோந்தல் என்ற மராத்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது.

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கோந்தல்'. அறிமுக இயக்குனரான சந்தோஷ் திவாகர் இயக்கியிருந்தார்.

இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. 'கோந்தல்' என்பது மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் வழிபாட்டு முறை.

கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது.

56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருது வென்றது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2027) நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க “கோந்தல்” திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இப்படம் ஆஸ்கருக்கு செல்கிறது.

மராத்தி சினிமா வரலாற்றில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் 4-வது திரைப்படம் இதுவாகும்.

SCROLL FOR NEXT