சினிமா செய்திகள்

'மரகத நாணயம் 2' திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்...

முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும் என்றார் இயக்குநர்.

தீபாவளி ட்ரீட்டாக 'மரகத நாணயம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ARK சரவன் எழுதி இயக்கிய இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களும் இந்தப் பாகத்திலும் இடம்பெறுவதாக படக்குழு உறுதியளித்துள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் 'மரகத நாணயம்2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் ARK சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார்.

சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

நட்சத்திர பட்டாளம்

படத்தின் இயக்குநர் ARK சரவன் பகிர்ந்து கொண்டதாவது, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கிட்டத்தட்ட மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனே போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் சார் என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கதையில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளது.

டிரெய்லரில் படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகும். அதன்பிறகு, படம் பார்க்கும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கின்றன. முதல் பாகத்தில் நிக்கியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் வலுவானதாகவும் ஸ்பெஷலாகவும் இருக்கும். படம் வெளியாகும்போது அதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT