சினிமா செய்திகள்

சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும், ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் - மன்சூர் அலிகான்

படத்தில் அவர் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

டிரெய்லர் வெளியீட்டு விழா:

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வரிசையில், நடிகர் மன்சூர் அலிகான் பேசும் போது, "‘ஆல் பாஸ்’ அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர்.

ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்தப் படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன், நாயகி கிடைத்துள்ளார்கள்.

நான் "கருப்பு" படத்தின் கிளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநிநியாயம் இது. யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லை.

சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்.

நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது:

நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான பெயர்.

இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி கொள்கிறேன். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது.

சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றார்.