பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சத்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ‘மக்கள் காவலன்’. இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்குகிறார்.
மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா ,ஜென்சன் திவாகர், லல்லு , ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.