மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம் உலகளவில் ரூ.140 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
செப்.10ம் தேதி வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிவரும் படம் விரைவில் ரூ.150 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரி மற்றும் தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், சூரியின் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.