சினிமா செய்திகள்

‘மண்டாடி’ படத்திற்கு தேதி குறிச்சாச்சு!

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் மீனவர் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நடிகர் சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன், ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இதனை தொடர்ந்து, நடிகர் சூரி தற்போது நடித்து வரும் படம் ‘மண்டாடி’. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் மீனவர் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

‘மண்டாடி’ படத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுஹால், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ‘மண்டாடி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘மண்டாடி’ படம் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.