சினிமா செய்திகள்

‘கலங்காதே...’ இன்று மாலை வெளியாகிறது ‘மகுடம்’ படத்தின் பாடல்

‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது.

‘மகுடம்’ படத்தின் புது பாடல் வெளியீடு தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகுடம்

நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் ‘மகுடம்’. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரித்துள்ளது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார். மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

விஷாலே இயக்கம்...

நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களம் என கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ‘மகுடம்’ படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் பாடல் வெளியாகின.

கலங்காதே...

இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் புது பாடல் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘மகுடம்’ படத்தின் புது பாடலான ‘கலங்காதே’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மேலும் படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாக உள்ளது. பாடல் வெளியீடு தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.