இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி உள்ளது.
இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ், அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டுடியோஸ் கீழ் தயாரிக்கின்றனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் எஸ்.பி.அரவிந்த் இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஸ்வாசிகா மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.