சினிமா செய்திகள்

விரைவில் திரைக்கு வருகிறது 'மதுர மோசடி'

இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சிட்பண்ட் மோசடிகளை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட 'மதுர மோசடி' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வி.கே. விஜயகண்ணா இயக்கிய இப்படத்தில் அஜய், அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வையும், குடும்ப உணர்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்கம்: வி.கே. விஜயகண்ணா

ஒளிப்பதிவு: எஸ். கார்த்திக்

இசை: பானு ஜேக்கப்

படத்தொகுப்பு: அல் ரமேஷ்

SCROLL FOR NEXT