சினிமா செய்திகள்

Maaya Kanavo | நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

நூறு சாமி திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "பிச்சைக்காரன்." இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் இந்தப் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்த போதிலும், அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் எப்போது இணைவார என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில், இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளனர். இருவரும் இணைந்துள்ள படத்திற்கு "நூறு சாமி" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன், லம்பர் பந்து படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாசிகா நடித்துள்ளது அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்தப் படத்தில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாடலான 'மாய கனவோ' வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் வருகிற மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT