தற்போதைய பிரபல இயக்குனர்களில் இளம் இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ்.
2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி என பல பிரபல நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார்.
டாப் 5 இயக்குனர்களில் ஒருவராகவும், இளைஞர்களிடம் இருந்து பேராதரவையும் பெற்று மிரட்டான ஆக்ஷன் படங்களையும் இயக்கி பிரபலமாகி வருகிறார். இந்நிலையில், இயக்குனராக பணியாற்றிய இவர் தற்போது கதாநாயகராக அறிமுகமாகி இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'DC' என்ற படத்தில் காதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான 'பிளடி வாலண்டைன்' ப்ரோமோ வீடியோவில் லோகேஷ் 'தேவதாஸ்' கதாபாத்திரத்திலும், வாமிகா 'சந்திரா' கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இது ஒரு ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நாளை மாலை 6:00 மணிக்கு, ரசிகர்களுக்காக இணையதளங்களில் அதிகாரப்பூர்வமாக டிரெய்லர் வெளியாக இருக்கிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.