பிரபல முன்னணி திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘DC’ திரைப்படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் டூ நடிகர்: லோகேஷின் புதிய அவதாரம்..
'கைதி', 'விக்ரம்', 'லியோ' போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் 'தேவதாஸ்' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகராக களம் இறங்குகிறார்.
அவருக்கு ஜோடியாக 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வாமிகா கபி நடித்துள்ளார்.
மிரட்டலான கூட்டணி..
'ராக்கி', 'கேப்டன் மில்லர்' படங்களின் மூலம் ராவான ஆக்ஷன் பாணியை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜிற்கு பிடித்த இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்துள்ளது.
கதைக்களம் மற்றும் டிரெய்லர் பின்னணி..
DC படத்தின் டிரெய்லர் அதிகாரபூர்வமாக மே 17 அன்று புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் தேவதாஸ் மற்றும் சந்திரா ஆகிய இருவருக்குள் நடக்கும் தீவிரமான காதல் மற்றும் அதீத வன்முறை நிறைந்த உலகத்தை அடிப்டையாகக் கொண்ட ஒரு கிரைம் திரில்லர் படமாக இருந்து வருகிறது.
மேலும், 'இந்த திரைப்படம் தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, ஆனால் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை மீண்டும் இயக்குநராகவே திரும்பவுள்ளேன்' என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த 'DC' திரைப்படம் 2026 ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.