பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுனுடன் இணையும் தங்களின் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தற்காலிகமாக 'AA23' மற்றும் 'LK7' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கூட்டணியின் அதிகாரப்பூர்வ அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
கடந்த சில நாட்களாகவே இந்தத் திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக இணையத்தில் பரவலான வதந்திகள் பரவி வந்தன.
ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அல்லு அர்ஜுனுடன் தீவிரமாக விவாதிக்கும் பிரத்யேகப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "சுவாரசியமான அப்டேட்டுகள் விரைவில் வரும்" எனக் குறிப்பிட்டு இந்த வதந்திகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இந்த பான்-இந்திய திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான இசையமைப்பாளரான ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தங்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்களின் தற்போதைய பட வேலைகளை முடித்த பிறகு, இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மாஸ் கூட்டணிகள் இணைவதால், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் இந்த 'AA23' படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.