சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறது 'லாக்டவுன்' படத்தின் டிரெய்லர்

கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மாலை மலர்

நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.