விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி திரையரங்கில் வெளியானது. படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் வசூலையும் குவித்தது.
இந்த நிலையில், 'LIK' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'LIK' படம் வருகிற 6-ந்தேதி பிரபல ஓ.டி.டி. தளமான அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு களிக்கலாம்.