ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் அதே நேரத்தில் கணிக்க முடியாத இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு இந்த படத்தின் கதை நகர்கிறது.
சிவராத்திரியன்று, முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளை கொண்ட 4 மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் தொடர் மூலம் எவ்வாறு ஒரு அசாதாரணமான நிகழ்வுகளுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்டு படம் உருவாகிறது.
படத்தில் லிஜோமோல் ஜோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சரவணன், பாவல் நவகீதன் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் களியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர் மற்றும் ஸ்மிருதி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார்.
படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தகட்ட விளம்பர நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தலைமை நிர்வாகி நெல்லை செழியன் தெரிவித்துள்ளார்.
ஹரிஷ்னி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரமாண்ட ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.