நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லெனின் பாண்டியன். டிடி பாலச்சந்திரன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் கங்கை அமரன் மற்றும் ரோஜா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் காவலரின் கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.