சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையில் ‘உன்னை நம்பி’ பாடலை கேட்க ரெடியா...

'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'லெனின் பாண்டியன்'. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜனுடன் இளையராஜா இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படததில் தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான ‘உன்னை நம்பி’ வெளியாக உள்ளது.

இசைஞானி இளையராஜா இசையில் ஸ்வேதா மோகன் பாடியுள்ள ‘உன்னை நம்பி’ பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.