சினிமா செய்திகள்

அடுத்த தளபதி யார்... அசராமல் பதில் கொடுத்த லெஜண்ட் சரவணன்

கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம். எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்

மாலை மலர்

தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு அவர் நிதானமாக பதில் அளித்தார்.

கேள்வி: ஹேமா கமிட்டி குறித்து உங்கள் கருத்து

லெஜெண்ட் சரவணன்: கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று நம்புகிறேன்

கேள்வி: நீங்கள் படங்களில் நடிப்பது அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

லெஜெண்ட் சரவணன்: மக்கள் நலன்களில் எப்போதும் எனக்கு அக்கறை உண்டு. காலம் நேரம் அமைந்தால் அரசியலுக்கு வருவேன். எனது கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

கேள்வி: விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் போவீர்களா

லெஜெண்ட் சரவணன்: இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை

கேள்வி: விஜய் கட்சிக்கு நீங்கள் ஆதர்வு தெரிவிப்பீர்களா?

லெஜெண்ட் சரவணன்: இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. 2026 தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும். வலுவான கூட்டணி ஆமைக்கு கட்சி ஆட்சியை பிடிக்கும்.

கேள்வி: விஜயின் கோட் படம் பார்த்தீர்களா? அந்த படம் குறித்து உங்களது கருத்து

லெஜெண்ட் சரவணன்: கோட் படம் ஒரு பேண்டஸி படம். அந்த அளவில் அதை ரசிக்கலாம்.

கேள்வி: சினிமாவில் அடுத்த தளபதி யார்?

லெஜெண்ட் சரவணன்: நீங்கள் தான் அடுத்த தளபதி யார் என்று சொல்ல வேண்டும்

என்று தெரிவித்தார்.