சினிமா செய்திகள்

ஜன நாயகன் படத்தை தியேட்டரில் முதல் ஷோ பார்க்க காத்திருக்கிறோம்- KPY பாலா

படிக்கும் நேரம் தான் முக்கியம். பைத்தியக்காரன் பேச்சை கூட கேட்கலாம்.

புதுச்சேரி காட்டேரிகுப்பம் கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகரும், சமூக ஆர்வலருமான கேபிஒய் பாலா பங்கேற்று பேசியதாவது:

10-ம் வகுப்பு படித்த ஒரு மாணவன் விளையாட்டில் மீது கொண்ட ஆர்வத்தால் 200 மதிப்பெண் மட்டுமே பெற்றார். தாயார் கேட்டு கொண்டதால் சில மணி நேரம் மட்டுமே அவர் ஆர்வத்துடன் படித்து 490 மதிப்பெண் எடுத்தார். அந்த நபர் நான்தான்.

படிக்கும் நேரம் தான் முக்கியம். பைத்தியக்காரன் பேச்சை கூட கேட்கலாம். நம்பால் முடியாது என கூறும் சொந்தக்காரன் பேச்சை கேட்க வேண்டாம். பிடித்ததை படியுங்கள, பிடித்த மாதிரி படியுங்கங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, நடிகர் விஜய்யின் ஜனநாயகம் திருட்டு பதிவில் வெளியானது மிகப்பெரிய தப்பு. இது மிகப்பெரிய இழப்பு. திரையரங்குகளில் படம் வெளிவர வேண்டும். விஜய்யின் படத்தை முதல் நாள், முதல் ஷோவில் பார்ப்பதுதான் திருவிழா. அதற்காக காத்திருக்கிறோம் என்றார்.