ஷாருக் கான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான "கிங்" படத்தின் 'து மில் ஜாயே' பாடல் டிரெண்ட் ஆகி வருகிறது.
பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக் கான் இன்று (நவம்பர் 2) தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு வரும் டிசம்பரில் வெளியாக உள்ள அவரின் மெகா பட்ஜெட் படமான "கிங்" உடைய முதல் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
'து மில் ஜாயே' என்ற தலைப்பிலான இந்தப் பாடல் நேற்று இரவு வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
சச்சின்-ஜிகர் இசையமைத்த இந்தப் பாடலின் இசையை அரிஜித் சிங் மற்றும் மதுபந்தி பாக்சி பாடியுள்ளனர்.
பிரபல சர்வதேசப் பாடகர் எட் ஷீரன் பாடிய ஆங்கில ராப் இந்தப் பாடலின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
குமார் இந்தப் பாடலுக்கு இந்தி வரிகளை வழங்க, எட் ஷீரன் ராப் வரிகளை எழுதியுள்ளார்.
காதல் பாடலான ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏற்கனவே 5 படங்களில் இவர்கள் ஜோடி பலரை கவர்ந்த நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக் கான், அவரது மகள் சுஹானா கான் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிருத் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்ததார்.
'கிங்' திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.