சினிமா செய்திகள்

'டாக்ஸிக்' படத்தில் நெருக்கமான காட்சி என் கணவர் பொருட்படுத்தவில்லை- நடிகை கியாரா அத்வானி

சினிமாவில் உள்ள பெண்களுக்கு இது ஒன்றும் புதிய அனுபவம் அல்ல. இது பல ஆண்டுகளாக பல தசாப்தங்களாக நடந்து வருகிறது.

‘டாக்ஸிக்’ படத்தில் யாசுடன் நெருக்கமான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், நடிகை கியாரா அத்வானி தனது கணவர் சித்தார்த் இதை பிரச்சனையாக கருதவில்லை என கூறினார். சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டபோது, அவர் தனது கணவரின் ஆதரவை பெற்றதாக தெரிவித்தார்.

யாசுடன் ‘டாக்சிக்’ படத்தில் நடிகை கியாராஅத்வானி நெருக்கமான காட்சிகளில் தாராளமாக நடித்திருந்தார். இந்த காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியது. படம் திரைக்கு வந்து எதிர்மறை விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் நடிகை கியாரா அத்வானி காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-

திருப்புமுனை

‘டாக்ஸிக்’ படம் பெரிய தொடக்கத்தைப் பெற்றிருந்த போதிலும் முதல் வாரத்தில் படத்திற்கு வந்த விமர்சனங்கள் என் மனதை நொறுக்குவதாக அமைந்தது. அதனால் நான் மனம் சோர்வடைந்தேன். எனது வழக்கமான பாணியில் இருந்து விலகி அந்த கேரக்டரில் நடித்தது அதற்கு காரணம்.

எனது பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் நினைக்கிறேன். படத்தில் யாசுடன் நெருக்கமான காட்சிகளுக்காக தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டேன். இந்த காட்சிகளை என் கணவர் சித்தார்த் ஒருபோதும் ஒரு பிரச்சனையாக கருதவில்லை. எங்களுக்குள் இந்த விஷயம் குறித்து பேசிக் கொள்ளவே இல்லை. அது அவரை பாதிக்கவும் இல்லை. அதை பற்றி அவர் கவலைப்படவும் இல்லை.

சினிமாவில் உள்ள பெண்களுக்கு இது ஒன்றும் புதிய அனுபவம் அல்ல. இது பல ஆண்டுகளாக பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. ஐஸ்வர்யா தொடங்கி பல அற்புதமான நடிகர்கள் வரை இது நிகழ்ந்துள்ளது. இன்னொரு விஷயம் சொல்ல வேண்டுமானால் சமூக வலைதளங்களில் டிரோல்கள் எழும்போது அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT