சினிமா செய்திகள்

KHxRK: ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.

நெல்சன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு KHxRK என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் இணையும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.

குறிப்பாக “யார் ஹீரோ?” என்று ரஜினி மற்றும் கமல், இயக்குனர் நெல்சனிடம் கேட்கும் வசனம் ரசிகர்களிடையே டிரெண்டானது.

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மே 14 ஆம் தேதி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.