சினிமா செய்திகள்

‘டூயூட்’ இயக்குநரின் அடுத்த மெகா மாஸ் பிளான்: STR உடன் இணையும் கீர்த்தீஸ்வரன்!

"அடுத்தடுத்து 'அரசன்' மற்றும் கீர்த்தீஸ்வரன் காம்போவில் உருவாகும் மாஸ் படம் என சிம்பு ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்"

கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 'டுயூட்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்தீஸ்வரன். தனது முதல் படத்திலேயே முற்போக்கான, நகைச்சுவையான கதைகளத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பிற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவரது அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசுகையில், "நான் தற்போது எனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். இந்த கதை ஆக்ஷன், எமோஷன் மற்றும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் கலந்த ஒரு 'செம்ம மாஸ்' எண்டர்டெய்னராக உருவாகி வருகிறது. இந்த கதைக்கு ஒரு மிகப்பெரிய 'ஸ்டார்' தேவைப்பட்டார். அதற்காகவே சிம்புவை மனதில்கொண்டு இந்த ஸ்கிரிப்ட்டை நான் செதுக்கி வருகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பில் எஸ்டிஆர் பிஸியாக உள்ளார். இதனை முடித்த பிறகு, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் STR 52 என்று அழைக்கப்படும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தொடங்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் அல்லது சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியவற்றில் ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதுமட்டுமின்றி, ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியாக ‘டூயூட்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஹிண்ட்டையும் அவர் கொடுத்துள்ளார். "சமீபத்தில் 'PR ப்ரோவிடம்' (பிரதீப் ரங்கநாதன்) டூயூட் 2 படத்தின் ஒன்லைனைச் சொன்னேன், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. Come on, DUDE என்ற புள்ளியிலிருந்து இந்த கதை தொடரும். முழுமையான கதை எழுதி முடித்தவுடன், 'டூயூட் 2' எப்போது தொடங்கும் என்பதைப் பார்க்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து 'அரசன்' மற்றும் கீர்த்தீஸ்வரன் காம்போவில் உருவாகும் மாஸ் படம் என சிம்பு ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.