சினிமா செய்திகள்

ஒரே வாரத்தில் 'டபுள் டமாக்கா'.. அடுத்தடுத்து வெளியாகும் கயாடு லோஹரின் படங்கள்!

கயாடு ரசிகர்களுக்கு ஒரே வாரத்தில் காத்திருக்கும் இரட்டை விருந்து.

தமிழ் திரையுலகில் 'டிராகன்' திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர், இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு அரிய சாதனையை நிகழ்த்த உள்ளார்.

செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில், அடுத்தடுத்த நாட்களில் இவரது இரண்டு முக்கியத் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் என தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஐ ஆம் கேம்' -செப்டம்பர் 3

செப்டம்பர் 3-ஆம் தேதி, துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கேங்ஸ்டர் த்ரில்லர் திரைப்படமான 'ஐ ஆம் கேம்' உலகளவில் வெளியாகிறது.

'RDX' திரைப்படப் புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயாடு லோஹர் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

'இம்மார்ட்டல்' - செப்டம்பர் 4

'ஐ ஆம் கேம்' வெளியான அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 4-ஆம் தேதி, ஜி.வி. பிரகாஷ் குமார் - கயாடு லோஹர் கூட்டணியில் உருவாகியுள்ள சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரைப்படமான 'இம்மார்ட்டல்' திரைக்கு வருகிறது.

மாரியப்பன் சின்னா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த டார்க் ஃபேண்டஸி திரைப்படத்தின் ட்ரைலரை அண்மையில் நடிகர் தனுஷ் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

ஒரே வாரத்தில் பேக்-டு-பேக் ரிலீஸாக வெளியாகும் இந்த இரண்டு திரைப்படங்களும் நடிகை கயாடு லோஹரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளன.

கேங்ஸ்டர் ஆக்ஷன் மற்றும் அமானுஷ்ய ஹாரர் என முற்றிலும் மாறுபட்ட இருவேறு பிரம்மாண்ட கதைக் களங்களில், தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் இணைந்து அவர் பாக்ஸ் ஆபீஸில் நிகழ்த்தப்போகும் இந்த 'டபுள் டமாக்கா' அதிரடியைக் காண ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தற்போது மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.