சினிமா செய்திகள்

Karuppu | டிரெய்லர் தெறிக்கும்... சூப்பர் அபடேட் கொடுத்த சாய் அபயங்கர்

கருப்பு திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற மே மாதம் 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்த புகிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "டிரெய்லர் தெறிக்கும், தி ஒன் வந்து கொண்டிருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.