சினிமா செய்திகள்

“ஆத்தி ராசாத்தி..” கருப்பு பட வீடியோ பாடல் வெளியீடு

ரூ. 300 கோடி வசூலைத் தாண்டியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வசூலைத் தாண்டியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

இந்த சூழலில் ‘கருப்பு’ படத்தின் ‘ஆத்தி ராசாத்தி’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பா. விஜய் எழுதிய இந்தப் பாடலை தாஸ் பெஞ்சமின் பாடியுள்ளார். இப்பாடல் திரையரங்கில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

‘கருப்பு’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.