சினிமா செய்திகள்

டோரதி திரைப்படத்தின் பின்னணி காட்சிகளை பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

டோரதி திரைப்படத்தின் பின்னணி காட்சிகளை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம், 2026 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

மதுரையில் 1990 களின் முற்பகுதியில் நடக்கும் சம்பவங்களான சாதி பிரிவினைகள், ஆணாதிக்க சமுதாயம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி கதைக்களம் அமைந்திருந்தது.

டோரதி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சனந்த் சுப்பு நடித்திருந்தார், இவரது நண்பராக மற்றொரு கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் டோரதி என்ற கதாபாத்திரத்தில் இரக்க குணம் கொண்டவராக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

டோரதி திரைப்படத்தின் ஒரு காலகட்டத்தில், சனந்த தன்னை ஒரு பெண்ணாக உணரும்போது கதை நகர ஆரம்பிக்கிறது.

சனந்த் தன்னை ஒரு பெண்ணாக குடும்பத்தில் வெளிப்படுத்தும் போது, குடும்பத்தினர் அவரை கொலை செய்ய முயற்சிப்பதும், பிறகு தனது குடும்பத்தினரிடம் இருந்து சனந்த தப்பி செல்வதும் படத்தில் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து ரிஷிகாந்த் மூலம் சனந்தை கொலை செய்வதற்காக, அவரது குடும்பத்தினர் அவரை குஜராத்திற்கு அனுப்புவர்.

இதைத்தொடர்ந்து படத்தின் கிளைமாக்சில் சனந்தை குஜராத்தில் வைத்து ரிஷிகாந்த் சந்திக்கும் சம்பவங்கள் படமாக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கிளைமாக்ஸில் படமாக்கப்பட்ட பின்னணி காட்சிகளை, படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில், டோரதி திரைப்படத்திற்கு தாங்கள் காட்டும் அன்பு, இந்த தீபாவளியை மிகவும் சிறப்பானதாக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த அவர், எங்கள் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் தரப்பில் இருந்து ஒரு சிறிய பரிசு என படத்தின் பின்னணி காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT