கார்த்திக் சுப்புராஜ்- மோகன் ஜி 
சினிமா செய்திகள்

திருநங்கைகள் குறித்து பேச்சு: இயக்குனர் மோகன்.ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

திருநங்கைகளை பற்றி பேசும் ‘டோரதி’ படத்தை வெற்றி அடைய வைக்க கூடாது என்பதில் ஒரு பிரிவினர் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

திருநங்கைகள் குறித்து இயக்குனர் மோகன்.ஜி பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். திருநங்கைகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருநங்கைகள் குறித்து இயக்குனர் மோகன்.ஜி பேசிய கருத்துக்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் திருநங்கைகளை பற்றி பேசும் ‘டோரதி’ படத்தை வெற்றி அடைய வைக்க கூடாது என்பதில் ஒரு பிரிவினர் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

மிகப்பெரிய அவமானம்

ஆனால் அதை தாண்டி படம் வென்று விட்டது. நேற்று என் குழுவினர் ஒரு வீடியோவை என்னிடம் காண்பித்தார்கள். அதை பார்த்து எனக்கு கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. இயக்குனர் மோகன்.ஜி படம் குறித்த உரையாடலின் போது நேகா என்ற திருநங்கையுடன் உரையாடினார். அதில் படம் குறித்து நிறைய கருத்துக்கள் சொன்னார்.

அது பிரச்சனை இல்லை. அவர் அந்த அக்காவிடம் திருமணம் முடிந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த திருநங்கை அன்பை பகிர்ந்து கொள்வோம். மகிழ்ச்சியாக துணையுடன் இருப்போம் என தெளிவாக விளக்கம் கொடுக்கிறார். ஆனால் மோகன்.ஜி அந்த கேள்வியை விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார். இதன் மூலம் அவர் சொல்ல விரும்புவது உங்களால் மற்றவர்களை போல உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நோக்கத்தில் பேசுகிறார். இது மிகப்பெரிய அவமானம். எல்லோரையும் மனிதராக பாருங்கள். பொதுவெளியில் இப்படி ஒரு கருத்தை அவரால் சொல்ல முடிகிறது என்றால் அது வன்முறைதான். மோகன்.ஜியின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT