சினிமா செய்திகள்

"கர" கொண்டாடப்படும்...!- இயக்குநர் மாரி செல்வராஜ்

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'போர் தொழில்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்துள்ளப் படம் கர. இப்படத்தில் தனுஷுடன் நடிகர்கள் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 30ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, கர படத்தின் ப்ரிவ்யூ ஷோ இன்று திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:-

இப்போது தான் 'கர' பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட நம்பிக்கையான படமாக இருந்தது.

நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சாருக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது.

அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் என் நன்றியும் அன்பும். கர கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.