சினிமா செய்திகள்

Kara Netflix | நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது நடிகர் தனுஷின் ‘கர’ திரைப்படம்

கடந்த ஏப்ரல் 30-ல் வெளியான கர திரைப்படம் இன்று ஓடிடி-யில் வெளியானது.

நடிகர் தனுஷ் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படமாக கடந்த மாதம் ஏப்ரல் 30 அன்று ‘கர’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு, ஆல்ஃப்ரட் ராஜா திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1990-களில் வாழும் கரசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தனுஷை சுற்றி கதை சுழல்கிறது. ‘கிராமத்தில் வாழும் ஒருவன், ஜப்தி செய்யப்பட்ட தனது நிலத்தை மீட்பதற்கு என்ன செய்கிறான்’ என்பதை கருவாக கொண்டு படம் நகர்கிறது.

கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கர திரைப்படம் இன்று (மே 28) வெளியானது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆன்லைனில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.