சினிமா செய்திகள்

இன்று மாலை வெளியாகும் 'கண்ணுக்குள்ள' பாடல்: டியூட் பட புகைப்படங்களை பகிர்ந்த இயக்குநர்

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார் டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மாலை மலர்

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 4 ஆவது பாடல் 'கண்ணுக்குள்ள' இன்று மாலை வெளியாகவுள்ளதாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அந்த பதிவில், 'டியூட்" படப்பிடிப்பின்போது பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Few Polaroids from the life of my agan and kural? #DudeAlso Kannukulla song coming out today evening.. check out #DudeDiwali pic.twitter.com/qKeAUkqeAc