சினிமா செய்திகள்

துபாயில் ஸ்கை டைவிங் மூலம் இந்தியன் 2 புரோமோஷன்- வைரல் வீடியோ

இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.இந்தியன் 2 படத்தினை பல வழிகளில் புரோமோஷன் செய்து வருகிறது படக்குழு.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தினை பல வழிகளில் புரோமோஷன் செய்து வருகிறது படக்குழு. அந்த வகையில் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் இந்த படத்தினை புரோமோஷன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT