சினிமா செய்திகள்

‘பத்தா’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!

படம் அக்.1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான 3வது படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோல், சாய் பிரித்விராஜ் (சிறுவன் கதாபாத்திரம்), அஜய் கோஷ், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், விஷ்ணு கோவிந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஸ்டார் ஸ்டுடியோ 18, சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. சாப் அபயங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

இந்நிலையில் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். படம் தொடர்பாக பேசிய அவர்.,

“முதலில் நன்றிதான் கூறவேண்டும். இதுபோன்ற படங்கள் நிறைய செய்யவேண்டும். படத்தில் எல்லோரும் பிராமாதமாக நடித்துள்ளனர். உயரம்வாரியாக அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சிறுவரை (சாய் பிரித்விராஜ்) அனைவருக்கும் பிடிக்கும். பெரிய நடிகர் (விஜய் சேதுபதி) ஏற்கனவே பெரிய நடிகர். அவரையும் பிடிக்கும். பத்தா நன்றாக உள்ளது. அனைவரும் பாருங்கள்.

சில கதைகள் சிலருக்காக எழுதப்பட்டது. இது ஒரு குடும்பப் படம். அனைவரும் பாருங்கள்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT