வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்புவின் திரைப்பயணத்திலேயே இதுவரை உருவாக்கப்பட்ட திரைப்படங்களில், இதுவே மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக அமையும் என்று கூறப்படுகிறது.
3 மாதத்தில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு செய்து தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6-ந்தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-
இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருந்த படத்திற்காக, நடிகர் சிலம்பரசன் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகத் தனது தலைமுடியை வளர்த்து வந்தார். ஆனால், 'அரசன்' படத்தின் கதையைக் கேட்ட பிறகு, அந்த படத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, இந்தப் படத்திற்காகத் தனது தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொள்ள அவர் முடிவு செய்தார்.
அவர் அப்படத்தின் கதாபாத்திரமாகவே முழுமையாக ஒன்றி வாழ்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் மனதில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். படப்பிடிப்பு சமயத்தில்கூட, படப்பிடிப்புக்கு வர வேண்டிய இடத்திற்கு அவர் நேரத்திற்கு அவர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுகிறார்.
சிம்பு தனிப்பட்ட முறையில் முன்வைத்த ஒரு கோரிக்கை என்னவென்றால், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்பதே ஆகும். ஏனெனில், அனிருத்தின் இசை இந்தப் படத்திற்கு மிகச் சரியாகப் பொருந்தும் என்று அவர் உறுதியாக நம்பினார். சிம்புவின் இந்தக் கோரிக்கையை இயக்குநரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் என்றார்.