சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ - வெளியீட்டு தேதி அறிவிப்பு

காஜல் அகர்வால் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரியின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சேத்தன் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’.

சாகர் பி. ஷிண்டே எழுதி, தயாரித்துள்ள இப்படம், பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது தொடர்பான முறைகேடுகளின் பின்னணிகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மங்கேஷ் தாக்டே படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.