ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாம் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. காமெடி மற்றும் எனர்ஜி நிறைந்த இப்படம், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை இணைத்து ரசிகர்களுக்கு விருந்தாக உருவாகியுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையுமா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
இதனிடையே, ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation தயாரிக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும், பரிதாபங்கள்' சுதாகர், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் (பக்ஸ்), துளசி, ராஜ் அய்யப்பா மற்றும் அப்துல் லீ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படம், காமெடி மற்றும் எனர்ஜி நிறைந்த ஒரு கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் என்றும் ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து முதல் வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாம் பாடலான ‘காதல் கசக்குது’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.