சினிமா செய்திகள்

ஜென்ம நட்சத்திரம் : திரையரங்குகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

கடந்த 18ஆம் தேதி வெளியான படம் ‘ஜென்ம நட்சத்திரம்’.திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாலை மலர்

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஒரு நொடி' பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான படம் 'ஜென்ம நட்சத்திரம்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டக் காட்சி மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக திரையிடப்பட்டது. திரைப்படம் மக்களிடையே நல்ல ஆதர்வு பெற்று வருகிறது. படக்குழு திரையரங்கிள் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.