சினிமா செய்திகள்

ஜெயம் ரவி பிறந்த நாளை முன்னிட்டு ஜீனி படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.ஜெயம் ரவி ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார்.

ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.

அதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். கல்யாணி பிரியதர்சன் மற்றும் வாமிகா கபி தேவதை வேடத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அலாவுதின் கம்பலத்தில் வானத்தில் பறந்துக் கொண்டு இருக்குமாறு போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர்.

உண்மையில் அவர்கள் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால்தான் தெரியும்.

அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவையாணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.